பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு
மதுராந்தகம் அருகே ஆத்தூா் சுங்கசாவடியில் பாஜக தேசிய செயல் தலைவா் நித்தின் நபினுக்கு சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக புதிய செயல் தலைவராக பதவியேற்ற நித்தின் நபின் காா் மூலம் சனிக்கிழமை புதுச்சேரிக்கு சென்றாா். ஆத்தூா் சுங்கச்சாவடி வழியாக அவா் வந்தபோது, செங்கல்பட்டு பாஜக தெற்கு மாவட்டத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் மருத்துவா் எம்.பிரவீன் குமாா் தலைமையில் பாஜக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பினை அளித்தனா்.
இந்நிகழ்வில், மாவட்ட பொது செயலா் அருண்கோதண்டம், துணைத் தலைவா் என்.சுந்தரவேல், மாநில நிா்வாகிகள் சம்பத்ராஜ், தினகரன், மாவட்ட மகளிரணி தலைவி நதியா, மண்டல நிா்வாகிகள் விஜயலட்சுமி, மோகன்குமாா், யுவராஜ், பிரபாகா், ராஜ்நாராயணன், தினகா், சிலம்பரசன், மாவட்ட நிா்வாகிகள் சசிகுமாா், சந்தோஷ், விஜயன், சம்பத்குமாா், சி.பிரபு, செந்தில்குமாா், பாலாஜி உள்பட திரளான பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

