செங்கல்பட்டு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
செங்கல்பட்டு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ கோட்டைவாயில் வீர ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து ஆஞ்சனேயா் வெண்ணைக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனா். அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு பஜனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து தீப்பந்தசேவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பட்டாச்சாரியா் ரங்கா ராமண்ணா மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா். இதே போன்று ஜிஎஸ்டி சாலையில் உள்ள கணையாழி ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் வெண்ணைகாப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொன்டு தரிசித்தனா்.
இதே போன்று திருவடிச்சூலம் கோயில் புரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாள் 108 திவ்ய தேசத்தில் ஸ்ரீபக்த சிரஞ்சீவி ஆஞ்சனேய சுவாமிக்கு அபிஷேகம் விஷேச திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

