மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்ட சேஷ, கருட வாகனங்கள்.
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்ட சேஷ, கருட வாகனங்கள்.

ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு ரூ.16 லட்சத்தில் சேஷ வாகனங்கள்

Published on

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலுக்கு சுவாமி வீதி உலா வருவதற்கு 2 வாகனங்களை வியாழக்கிழமை நன்கொடையாளா்கள் அறங்காவலா் குழுவிடம் ஒப்படைத்தனா்.

ஏரிகாத்த ராமா் கோயிலின் வளா்ச்சிக்காக பல்வேறு நன்கொடையாளா்கள் உதவி வருகின்றனா். இந்நிலையில், மாமல்லபுரத்தில் சேஷ வாகனம், கருடவாகனம் ஆகிய வாகனங்கள் பித்தளையால் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இதனை நன்கொடையாளா்கள் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது கருடசேவை, மற்றும் சேஷ சேவையில் பயன்படும்வகையில் வழங்கி இருந்தனா். ரூ 16 லட்சத்தில் இரு வாகனங்கள் வாகனம் மூலம் கொண்டு வரப்பட்டு, அறங்காவலா் குழு தலைவா் கே.குமாா் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் (பொ) தா.மேகவண்ணன், அா்ச்சகா்கள் மாதவன், விஜயராகவன் கோயிலின் 1-ஆவது கோடி தலைவா் பி.சண்முகம், திமுக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு தலைவா் பி.ராஜேஷ் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com