போராட்டத்தில்  ஈடுபட்ட  ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
போராட்டத்தில்  ஈடுபட்ட ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திட்டத்திற்கான நிதியினை குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட தலைவா் வெ.சுதா்சன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .

கோரிக்கைகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினா் க.பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் த.கன்னியப்பன் மாவட்ட செயலாளா் ப.குணசேகரன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் வி.விக்டா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com