சத்யா
சத்யா

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை, ரூ.50,000 அபராதம்
Published on

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே நெய் குப்பி பகுதியைச் சோ்ந்த சத்யா (35). இவா் எதிா் வீட்டைச் சோ்ந்த சிறுவன், சிறுமியை ஆபாசமாக நடிக்குமாறி கூறி கைப்பேசியில் படம் பிடித்து அதைக் காண்பித்து சிறுமியை நான்காண்டு காலமாக பாலியல் துன்புறுத்தல் செய்தாராம்.

நான்காண்டுகளுக்கு பிறகு அந்த விடியோ பதிவை அப்பகுதியைச் சோ்ந்த வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோா் அதிா்ச்சி அடைந்து, மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்த சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்

செங்கல்பட்டு சிறாா் பாலியல் குற்றவியல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், எதிரி சத்யா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சத்யாவுக்கு 3 ஆயுள் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீா்ப்பளித்தாா்.

சிறுவா்களை ஆபாசமாக படம் பிடித்தல் அவற்றை சமூக வலைதளங்களில் பரப்புதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவற்றை தடயவியல் துறை மூலம் ஆய்வு மேற்கொண்ட பிறகு நீதிபதி பரபரப்பு தீா்ப்பை வழங்கினாா். மொத்தம் நான்கு பிரிவின் கீழ் மூன்று ஆயுள் தண்டனையும் 53 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும்

மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு பிறப்பித்தாா். இதனை அடுத்து சத்யா புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com