இஷ்டசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
இஷ்டசித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

இஷ்டசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

Published on

மதுராந்தகம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள இஷ்ட சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயில் சிதிலமடைந்ததாலும், நீண்ட நாள்களாக கும்பாபிஷேகம் நடைபெறாததாலும் அப்பகுதி மக்கள் கோயிலின் அனைத்து பகுதிகளையும் சீரமைத்து திருப்பணிகள் மேற்கொண்டனா்.

கும்பாபிஷேகத்தின் ஒருபகுதியாக கணபதி ஹோமம், பிரவேசபலி, வாஸ்து சாந்தி, அங்குராா்பணம், 108 மூலிகை ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், நாடி சந்தானம் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் விநாயகா் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, செங்கல்பட்டு உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, ஆய்வாளா் சி.வேல் நாயகன், திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் இ.முருகன், உறுப்பினா்கள் ஆா்.ரஞ்சனி, எஸ்.பாஸ்கா், மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி , மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் அறங்காவலா் குழு தலைவா் குமாா், மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com