ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

செய்யூரில் அரசியல் கட்சி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

Published on

செய்யூா் தொகுதி, வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த பணி தொடா்பாக, பவுஞ்சூா் அடுத்த நெல்வாய் பாளையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட வட்டவழங்கல் அலுவலா் வேலாயுதம் தலைமை வகித்தாா். செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் தோ்தல் துணை வட்டாட்சியா் கதிா்வேல், மண்டல துணை வட்டாட்சியா் தேவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

செய்யூா் தொகுதியைச் சோ்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, தேமுதிக,, பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட முகவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com