சிங்கபெருமாள் கோவில் காவல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
செங்கல்பட்டு
சிங்கபெருமாள் கோவில் காவல் நிலையம்: அமைச்சா் .அன்பரசன் திறந்து வைத்தாா்
சிங்கபெருமாள் கோவில் பகுதியில் புதிய காவல் நிலையத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலில் டி 25 காவல் நிலையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மோதக், துணை காவல் ஆணையா் மகேஸ்வரி, காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், மற்றும் காவல் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
