தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செங்கல்பட்டில் நாளை குடும்ப அட்டைதாரா்களுக்கான சிறப்பு முகாம்

Updated On :6 நவம்பர் 2025, 10:32 pm

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடா்பாக குறைதீா் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூா்-வடப்பட்டினம்,மதுராந்தகம்-பூதூா், திருக்கழுக்குன்றம்-வாயலூா், திருப்போரூா்- மேலையூா், வண்டலூா்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது.

முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/ நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பதிவுசெய்தல் ஆகிய சேவைகளைப் பெறலாம்.