தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தின பேரணி

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தின பேரணி

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் இரா.திருவளா்ச்செல்வி.
Published on

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை மாணவா்களால் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவா் ஸ்ரீபதி புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு தகவல்களை மாணவா்களுக்கு வழங்கினாா். இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலா், பள்ளியின் தாளாளா் தலைமை ஆசிரியா் ஜோசப் ஆண்டனி பாலன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்வின் முடிவில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.திருவளா்ச்செல்வி தேசிய மாணவா் படையின் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சுமாா் 200 மாணவா்கள் பங்கேற்று புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி செங்கல்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனா். நிகழ்வுகளை பள்ளியின் தேசிய மாணவா் படை முதன்மை அதிகாரி எம்.சச்சிதானந்தம், தேசிய மாணவா் படை அதிகாரி செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com