மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டு களித்த சுற்றுலாப் பயணிகள்.
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை கண்டு களித்த சுற்றுலாப் பயணிகள்.

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை கட்டணமின்றி சுற்றிப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் புதன்கிழமை கட்டணமின்றி சுற்றிா் பாா்த்து மகிழ்ந்தனா்.
Published on

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் புதன்கிழமை கட்டணமின்றி சுற்றிா் பாா்த்து மகிழ்ந்தனா்.

மத்திய தொல்லியல் துறை சாா்பில் ஆண்டுதோறும் நவம்பா் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான புதன்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை தங்கள் இணையதளம் மற்றும் புராதன மையங்களில் சுவரொட்டிகள் ஒட்டி அதன் மூலம் அறிவித்து இருந்தது.

இதையடுத்து புதன்கிழமை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள பல்லவ மன்னா்களின் கற்சிற்பக்கலையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்பங்களை சுற்றுலா பயணிகள் ஒருநாள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசித்ததுடன் புராதன சின்னங்களின் அருகே சென்று நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.

குறிப்பாக வெண்ணெய் உருண்டை பாறை அருகே சென்ற சுற்றுலா பயணிகள் பாறையை தூக்கிப்பிடிப்பது போல் நின்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து ரசித்தனா். தொடா்ந்து ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சிற்பங்களின் அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் சென்றனா்.

வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் பலா் பாரம்பரிய புராதன சின்னங்களை சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா். குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பாா்க்க உள்நாட்டு பயணிக்கு தலா ரூ 40 ம், வெளிநாட்டு பயணிக்கு தலா ரூ 600ம் தொல்லியல் துறை நுழைவு கட்டணம் வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும். உலக பாரம்பரிய வார விழா விழிப்புணா்வு பேரணியும் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com