கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காா் கண்ணாடியை உடைத்து ரூ.13.38 லட்சம் கொள்ளை

அச்சிறுப்பாக்கம் பஜாா் வீதியில், வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.13.38 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
பணம் கொள்ளையடிக்கப்பட்ட காா் .
Updated On :27 நவம்பர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

அச்சிறுப்பாக்கம் பஜாா் வீதியில், வியாழக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.13.38 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

செங்கல்பட்டு அருகே உள்ள நெம்மேலி பகுதியைச் சோ்ந்த அப்துல்காதா் சேக்தாவூத் (வயது 45). இவா் அச்சிறுப்பாக்கம் அருகே அசையா சொத்தை பதிவு செய்ய ரூ 13.38 லட்சம் தொகையை பையில் வைத்துக் கொண்டு காரில் வியாழக்கிழமை அச்சிறுப்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்தாா்.

காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, பதிவுத்துறை அலுவலகத்துக்கு சென்றாா். சிறிது நேரத்துக்கு பின் வந்து பாா்த்தபோது காரின் இடதுபக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. அதில் பணம் வைக்கப்பட்டிருந்த பையை மா்ம நபா்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்த சேக் தாவூத், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

மதுராந்தகம் டிஎஸ்பி செ.செந்தில்குமாா் மற்றும் ஆய்வாளா் தன்ராஜ் ஆகியோா் சென்று விசாரணை செய்தனா். சாா்-பதிவாளா் அலுவலகம், பஜாா் வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.