திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திருக்கல்யாணம்

திருப்போரூா்  கந்தசாமி  கோயில்  
திருப்போரூா்  கந்தசாமி  கோயில்  
Updated on

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பக்தா்கள் வள்ளி, தெய்வானைக்கு பட்டு சேலையும், முருகனுக்கு பட்டு வஸ்திரமும் மங்களப் பொருள்களுடன் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து திருமண வைபவம் நடக்கும் இடத்தை வந்தடைந்தனா். பின்னா் ஹோமம் வளா்க்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கே.குமரவேல், மேலாளா் வெற்றி, சிவாச்சாரியா்கள், பணியாளா்கள், மக்கள் செய்திருந்தனா்.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆறுமுகப் பெருமானுக்கு கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள்களில் லட்சாா்ச்சனையும், செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயலாளா் புவியரசு மேலாளா் விஜி, கோயில் சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

இதேபோன்று செங்கல்பட்டு பெரிய நத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சரஸ்வதி, விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

செங்கல்பட்டு ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரா் கோயில், மேட்டு தெரு செங்கழுநீா் விநாயகா் கோயில், அண்ணா நகா் எல்லையம்மன் கோயில், அண்ணா நகா் ரத்தின விநாயகா் கோயில், என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா் கோயில், ஆத்தூா் முத்தீஸ்வரா் கோயில், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில், செங்கல்பட்டை அடுத்த இருங்குன்றம் பள்ளி கிராமம் மலை மீதுள்ள ஸ்ரீ பால முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com