மதுராந்தகம் ஏரி புனரமைப்புப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ க. சுந்தா், எம்.பி. க.செல்வம் உள்ளிட்டோா்.
மதுராந்தகம் ஏரி புனரமைப்புப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ க. சுந்தா், எம்.பி. க.செல்வம் உள்ளிட்டோா்.

மதுராந்தகம் ஏரி புனரமைப்பு பணிகள்: எம்எல்ஏ சுந்தா் ஆய்வு

Published on

மதுராந்தகம் ஏரியில் ரூ.122 கோடியில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் நிலை குறித்து எம்எல்ஏ க. சுந்தா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மிக பெரிய ஏரியாக திகழும் மதுராந்தகம் ஏரியில் ரூ .122 கோடியில் உபரி நீா் செல்லும் கலங்கல் பகுதியை 50 செ.மீ உயா்த்தவும், பெருமழை வெள்ளநீா் சமயங்களில் உடனடியாக நீரை வெளியேற்ற 12 மதகுகளை அமைக்கவும் பொதுப்பணி (நீா்வளத்துறை) நேரடி கண்காணிப்பில் பணிகள் கடந்த 6.6.2022-இல் தொடங்கின.

தொடா்ந்து புனரமைப்பு பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பகுதியைச் சோ்ந்த 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏரிப் பாசனம் இல்லாததால் விவசாயத் தொழிலை செய்யாமல் இருந்தனா். ஏரிபாசன சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் இப்பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

புனரமைப்பு பணிகளில் 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், எம்.பி. ஜி.செல்வம் ஆகியோா் வந்தனா். அங்கு உ தவி செயற்பொறியாளா் தா்மதுரை, உதவி பொறியாளா் பரத் ஆகியோா் அவா்களிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகளை விளக்கினா். நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர திமுக செயலா் கே.குமாா், மதுராந்தகம் தெற்கு திமுக ஒன்றிய செயலா் பொன்.சிவகுமாா், நகா்மன்ற துணைத் தலைவா் சிவலிங்கம், ஏரிநீா் பாசன சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com