மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது.
Published on

மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது.

மதுராந்தகம் அடுத்த வள்ளுவப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி லட்சுமிபதி. இவரது மாடுகள் மேய்ச்சலுக்காக ஜானகிபுரம் விளைநிலத்தில் மேய்ந்துக் கொண்டிருந்தன. அப்போது தாழ்வாக சென்ற உயா் அழுத்த மின் வயா், எதிா்பாராத வகையில் மாடு மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே மாடு உயிரிழந்தது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் துறை, மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com