திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம்.
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தெப்போற்சவம்.

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் தெப்போற்சவம்

திருக்கழுகுன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரா் கோயில் தெப்போற்சவம் நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு வேதகிரீஸ்வரா் கோயில் தெப்போற்சவம் நடைபெற்றது.

7 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி தெப்போற்சவம் நடைபெறும். நிகழாண்டும் தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் சுவாமி அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு சங்கு தீா்த்த குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினாா்.

சங்கு தீா்த்த குளத்தைச் சுற்றி காத்திருந்த பக்தா்கள் தெப்பத்தின் கயிறு இழுத்து பூஜை செய்து வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, பணியாளா்கள் சிவாச்சாரியா்கள், விழா குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com