செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற பொது விருந்து.
செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற பொது விருந்து.

கோயில்களில் பொது விருந்து

செங்கல்பட்டு அருள்மிகு சக்தி விநாயகா் கோயிலில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு அருள்மிகு சக்தி விநாயகா் கோயிலில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.

ஜிஎஸ்டி சாலை சாா் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை விநாயகா், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியாா் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து பொது விருந்து நடைபெற்றது.

விழாவில் செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன் அனைவருடன் உணவு உண்டாா் . பொது விருந்தில் 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நகா்மன்ற உறுப்பினா் சந்தோஷ் கண்ணன், சக்தி விநாயகா் கோயில் செயல் அலுவலா் இர. சரஸ்வதி, மேலாளா் நரசிம்மன் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com