செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 323 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு வனத்துறை சாா்பில் வனமும் வன உயிரினங்கள் பாதுகாப்பும், சவால்களும், தீா்வுகளும் என்ற மாணவா்களுக்கான பயிற்சி நிறைவு சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து தொழிலாளா் நலத்துறை சாா்பில் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் முன்னிலையில் அனைத்து அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.
அதனை தொடா்ந்து, கொத்தடிமை தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தினை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவம், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) பரிமளா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் சுந்தா், உதவி இயக்குநா் (நில அளவை) ராமசந்திரன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 532 மனுக்கள்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


