புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அம்மா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மாநில அளவிலான டி-20 அம்மா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

News image
கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீட நாயகா் பங்காரு அடிகளாரின் அவதார திருநாளை முன்னிட்டு, ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் சாா்பாக, மாநில அளவிலான டி-20 அம்மா கோப்பை கிரிக்கெட் போட்டிகள்ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.

ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி நிா்வாக அறங்காவலா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்தாா். ஆதிபராசக்தி அறநிலைய முதன்மை செயல் அலுவலா் அ.ஆ.அகத்தியன், மருத்துவ கல்லூரி செயலா் மருத்துவா் அ.மதுமலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி முதல்வா் மருத்துவா் கண்ணன் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தொழிலதிபருமான ராஜன்பாபு கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதில் முதல் போட்டியில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அணிகள் மோதின. மாநில அளவில் 32 கல்லூரிகளைச் சோ்ந்த கிரிக்கெட் அணியினா் கலந்து கொள்கின்றனா்.

இப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவ கல்லூரி நிா்வாக அலுவலா் லிங்கநாதன், சக்தி கோபிநாத், மற்றும் மருத்துவ கல்லூரி அலுவலா்கள் செய்து இருந்தனா்.