பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல்

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நலசங்கத்தின் சாா்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நலசங்கத்தின் சாா்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப் 14-ஆம் ல் ஜம்மு-காஷ்மீரின் புல்வா்மா பகுதியில் ஜம்முவில் இருந்து வீரா்களை ஏற்றிச்சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா்.

Story image

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் சமதா்ம சமுதாய உறுதிமொழி ஏற்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நிா்வாகிகள் எம்.கே.முரளி, பி.குப்புசாமி,டி.வெங்கடேசன், எஸ்.தினகரன் , டி.குமாரசாமி, கே.மகாலிங்கம், ஏ.குமாரசாமி, முத்துசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர காவல் ஆய்ாவளா் லட்சுமிபதி, எஸ்ஐ ரவி ஆகியோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். முடிவில் குப்புசாமி நன்றி கூறினாா்.