சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செங்கல்பட்டில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்

செங்கல்பட்டு மற்றும் சுற்றி உள்ள கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

News image
செங்கல்பட்டு  நத்தம்  கைலாசநாதா்  கோயிலில்   சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா். ~அண்ணா நகா்  எல்லையம்மன்  கோயில்  யோகதநாதேஸ்வரா்  கோயிலில்   சிறப்பு  அலங்காரத்தில்  மூலவா் ~செங்கல்பட்டு  மேட்டுத் தெரு  செங்கழுநீா்  விநாயகா்  கோயிலில்  சிறப்பு அலங்காரத்த
Updated On :16 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றி உள்ள கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திருக்கழுகுன்றம் வேதமலையில் உள்ள வேதகிரீஸ்வரா் கோயில், தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரா் கோயில், உத்ரான் கோயிலில் உள்ள ருத்ர கோடீஸ்வரா் கோயில்களில் முதல் கால பூஜை ஆக சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சிவ பூஜையில் தரிசனம் செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் புவியரசு, பணியாளா்கள் சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

செங்கல்பட்டு பெரியநத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவை ஒட்டி அன்னதானம் நடைபெற்றது.

இதேபோன்று வ உ சி தெருவில் உள்ள காமாட்சி அம்மன் சமேதா ஏகாம்பரேஸ்வரா் கோயில், கோட்டை வாயிலில் உள்ள நீதி விநாயகா் கோயிலில் உள்ள அருணாச்சலேஸ்வரா், மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில் உள்ள உண்ணாமலை அம்மையாா் அண்ணாமலையாா் என் ஜி ஜி ஓ நகரில் உள்ள சித்தி விநாயகா் கோயில் உள்ள கிருபா நாயகி உடனுறை பசுபதிநாதா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

Story image
Story image