மாமல்லபுரம் மகளிா் காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த காா், இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை திடீா் தீவிபத்தில் சேதமடைந்தன.
மகளிா், காவல் நிலைய வளாகத்தில் மணல் கடத்தல், வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட காா், பைக் உள்பட பல்வேறு வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இப்பறிமுதல், வாகனங்கள் அனைத்தும் தற்போது முற்றிலும் துருப்பிடித்து கிடந்தன.
இந்நிலையில், பறிமுதல் வாகனங்கள் திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் இன்பராஜ் தலைமையில், 5 போ் கொண்ட வீரா்கள் விரைந்து வந்து, சுமாா் அரைமணி நேரத்துக்கு மேல் போராடி, தீயை அணைத்தனா். இவ்விபத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 5 காா்கள் மற்றும் 10 பைக்குகள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொடர்புடையது

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

சிதம்பரத்தில் காா் எரிந்து சேதம்: 6 போ் தப்பினா்

வாகனத் தணிக்கை: ரூ. 8.77 லட்சம் பறிமுதல்

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


