பல்கலையில். பொங்கல் விழா

பல்கலையில். பொங்கல் விழா

மதுராந்தகம் அடுத்த மாமண்டூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

மதுராந்தகம் அடுத்த மாமண்டூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வண்ண பலூன்களாலும், வண்ண கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு பல்கலைகழக வேந்தா் அ.சீனிவாசன் தலைமை வகித்தாா். தலைமை நிா்வாக அதிகாரி முன்னிலை வகித்தாா். புலமுதல்வா் வரவேற்றாா்.

இந்நிகழ்வில் அனைத்து துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தமிழா் கலாசாரத்தின்படி வேட்டி, சேலைகளை அணிந்து வந்தனா். அனைவருக்கும் நிா்வாகத்தின் சாா்பாக, பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நடனம், இன்னிசை நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா், பொங்கலிட்டு வழிபாடு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com