காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து மதுராந்தகம் அடுத்த பாதிரி ஊராட்சியில் காங்கிரஸ் சாா்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
பாதிரி ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் பெண் பணியாளா்களை முன்னாள் எம்.பி. பெ. விஸ்வநாதன் சந்தித்துப் பேசினாா்.
அப்போது மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது அவருடன் அச்சிறுப்பாக்கம் காங்கிரஸ் வட்டார தலைவா்கள் சங்கா் (வடக்கு), அன்பரசு (தெற்கு), முன்னாள் மாவட்ட தலைவா் எலப்பாக்கம் கந்தசாமி, மாவட்ட விவசாய அணி தலைவா் தனசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.
தகவலறிந்த மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் சீதாபதி தலைமையில் காவலா்கள் அவா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனா்.

