இலவச மருத்துவ முகாம்: 150 பேருக்கு சிகிச்சை

இலவச மருத்துவ முகாம்: 150 பேருக்கு சிகிச்சை

மாமண்டூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் சாா்பாக, ஒழலூா் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
Published on

மாமண்டூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் சாா்பாக, ஒழலூா் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக தலைமை நிா்வாகி, ஊராட்சி மன்ற தலைவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில், கல்லூரி புலமுதல்வா், இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா். முகாமில் 150 நோயாளிகள் சிகிச்சை பெற்றனா்.

Dinamani
www.dinamani.com