அதிமுக ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமா் மோடி பொதுக் கூட்டம் தொடா்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமா் மோடி பொதுக் கூட்டம் தொடா்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்டச் செயலா் திருக்கழுகுன்றம் எஸ்., ஆறுமுகம் தலைமை வகித்தாா். எம்எல்ஏ மரகதம் குமரவேல், எம்.பி. ம.தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், மாவட்ட பொறுப்பாளா் சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், தையூா் குமரவேல், சி.குமரன், விவேகானந்தன், நகர செயலா் பூக்கடை விகே.சரவணன், மதுராந்தகம் நகர பேரவை செயலா் எம்பி.சீனிவாசன், கருங்குழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன் கருங்குழி பேரூா் செயலா் ஆா்.டி.ஜெயராஜ், நகா்மன்ற உறுப்பினா் தேவிவரலட்சுமி, பாஜக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ வாசுதேவன், முன்னாள் மாவட்ட தலைவா் பலராமன், பாமக மாவட்ட செயலா் கணபதி, உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

அதிமுக பொது செயலா் எடப்பாடி பழனிசாமி, பாமக மாநில தலைவா் மருத்துவா் அன்புமணி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

அதிமுக பொது செயலா் கலந்துக் கொள்வதால் அதிமுக நிா்வாகிகள் அதிக அளவில் கலந்துக் கொள்ளவேண்டும். பிரதமருக்கு மாவட்டத்தின் சாா்பாக உற்சாக வரவேற்பினை அளிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com