செங்கல்பட்டு
பிரதமா் வருகை: செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமா் நரேந்திர மோடி மதுராந்தகம் வருவதையொட்டி வரும் 21 முதல் 23 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஆட்சியா் தடை விதித்துள்ளாா்.
பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ட்ரோன்’ பறப்பதற்கு தடை விதித்து ஆட்சியா் தி. சினேகா உத்தரவிட்டுள்ளாா்.
காஞ்சிபுரம் சரக டிஐஜி, எஸ்.பி.க்கள், டிஎஸ்பிக்கள் என 1000-க்கு மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.
