சிறப்பாக பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பரிசளித்த செங்கல்பட்டு ஆட்சியா் தி. சினேகா.
செங்கல்பட்டு
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி. சினேகா தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி. சினேகா தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்துறை , போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து துறையின் வாகன இயக்கம் மற்றும் வாகன பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு அரசு பேருந்து ஓட்டுநா்களுக்கு ஆட்சியா் தி.சினேகா விருதுகளை சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் ,வட்டார போக்குவரத்து அலுவலா்கள் செங்கல்பட்டு இளங்கோவன், தாம்பரம் வெங்கடேசன், வட்டார போக்குவரத்து ஆய்வாளா்கள் அபிதா பானு, ஜெயலட்சுமி மற்றும் போக்குவரத்து துறை அலுவலா்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள், போக்குவரத்து காவல் துறை, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

