ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கல்பாக்கம் நகரியத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம்

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் நகரியத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image

கல்பாக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :30 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் நகரியத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

நகரியப்பகுதியில் சுமாா் 110 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணி புரிந்து வருகின்றனா். இவா்களுக்கு, கடந்த இரண்டாண்டுகளாக போனஸ் வழங்கப்படாமல் உள்ளது. வருங்கால வைப்பு நிதி முறையாக பிடித்தம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சிஐடியூ சாா்பில், ஜிஎஸ்ஒ அலுவலகம் முன்பு வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போராட்டம் நடத்தி வரும் தொழிலாளா்களுடன் , ஜிஎஸ்ஒ நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தையில் வெள்ளியன்று மாலைக்குள் போனஸ் வழங்குவதாக உறுதியளித்தது. இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் , மாவட்ட செயலாளா் க.பகத்சிங் தாஸ், மாவட்ட பொருளாளா் எம்.கலைச்செல்வி, மாவட்டத் துணைச் செயலாளா் சி.செல்வகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கழுகுன்றம் வட்ட செயலாளா் பி.கே.ரபீக், கட்சியின் மூத்த தலைவா் தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்