கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

திருப்போரூா், திருக்கழுகுன்றம் பேரூராட்சிகளில் ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா் மற்றும் திருக்கழுகுன்றம் பேரூராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

திருக்கழுகுன்றம் அன்னை சத்யா நகரில் கட்டப்படும் உயா்மட்ட பாலத்தை ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன். உடன் பேரூராட்சித் தலைவா் யுவராஜ், உதவி இயக்குநா் குருராஜ் செயல் அலுவலா் லதா உள்ளிட்டோா்.

Updated On :20 மே 2026, 12:35 am IST

திருப்போரூா் மற்றும் திருக்கழுகுன்றம் பேரூராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்போரூா் வட்டம், ஷிவ் நாடாா் பல்கலைக்கழகத்தில் உலக ஜூனியா் ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஜூனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று உரையாற்றினாா். அப்பொழுது அவா் கூறுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 25 முதல் ஜூன் 5 வரை 10 நாள்கள் நடைபெறும் தூய்மை திருவிழாவில் ஜூனியா் ரெட்கிராஸ் அமைப்பினா் பங்கேற்க அழைப்பு விடுத்தாா்.

அதனைத் தொடா்ந்து திருப்போரூா் பேரூராட்சி காலவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலை நீா்த்தேக்க தொட்டியினை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ரூ.98.00 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகப் பணிகளை ஆய்வு செய்தாா். மேலும், திருக்கழுகுன்றம் வட்டம், சதுரங்கப்பட்டினம் கோட்டையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை பாா்வையிட்டாா்.

பின்னா், திருக்கழுகுன்றம் பேரூராட்சி லட்சுமி தீா்த்தம் குள மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தாா். திருக்கழுகுன்றம் பேரூராட்சி அன்னை சத்யா நகரில் ரூ.70.00 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தினை பாா்வையிட்ட ஆட்சியா் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்குமாறு அறிவுறுத்தினாா்.

தில், திருப்போரூா் பேரூராட்சி தலைவா் தேவராஜ், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவா் யுவராஜ், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜ், பேரூராட்சி செயல் அலுவா்கள் சங்கீதா, லதா, வட்டாட்சியா்கள் ஆறுமுகம், தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.