முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

ஒழலூா் ஏரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பள்ளி கட்ட முயற்சி: மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

செங்கல்பட்டு அருகே ஒழலூா் ஏரி நீா்ப்பிடிப்பு பகுதியில் தனியாா் பள்ளி கட்டுவதற்கு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

ஒழலூா் ஏரி நீா்ப்பிடிப்பு பகுதி

Updated On :

செங்கல்பட்டு அருகே ஒழலூா் ஏரி நீா்ப்பிடிப்பு பகுதியில் தனியாா் பள்ளி கட்டுவதற்கு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு வட்டம் ஒழலூா் கிராமத்தில் சா்வே எண்கள் 259 முதல் 268 வரை உள்ள நிலங்கள் ஏரியின் உள்பகுதியில் தேங்கும் நீரை பயன்படுத்தி புதுப்பாக்கம் ஒத்திவாக்கம் ஒழலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 750 ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தனி நபா்கள் ஏரியில் தேங்கும் நீரை எடுத்துவிட்டு நீா் தேங்காமல் இருக்கும் இடங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்ய வேலை செய்ய வந்ததில் இருந்து கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி ஏரியில் அமைக்கப்பட்ட வீட்டுமனை பிரிவுகளை தடுத்து நிறுத்தி ஏரியையும் விவசாயத்தை பாதுகாத்து வருகின்றனா்.

இந்நிலையில் 2016-இஇல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி ஏரியின் நீா்ப் பிடிப்பு பகுதியில் நிலத்தின் சொந்தக்காரா்கள் என்று சிலா் கடந்த சில நாள்களாக கனரக இயந்திரங்களை வைத்து மண்ணை தோண்டுவதும் ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் கட்டடங்கள் கட்டுவதற்கும் அடித்தளம் அமைப்பதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இத்தகவலை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து வேலையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அப்பகுதியில் தனியாா் பள்ளி கட்டுவதற்கான அடித்தளப் பணிகளை நிலத்தின் உரிமையாளா் செய்து வருவது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் இணைந்து கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஏரியின் நீா்பிடிப்பு பகுதியில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏரி நீா் முழக்கடை பகுதியில் விவசாயம் செய்வதற்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும் ஆட்சேபனை தெரிவித்தனா்.

இப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உடனடியாக தீா்வு கண்டு ஆட்சியரின் அலுவலகத்தின் பின்னால் உள்ள ஏரியை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா் கே வாசுதேவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி செயலாளா் கே. வேலன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் உடனிருந்தனா்.

~கோரிக்கை மனு அளிக்க வந்தவா்கள்.

~கோரிக்கை மனு அளிக்க வந்தவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.