ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

இடைத் தோ்தலில் 100% வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வு பேரணி

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் மு. வீரப்பன்

Published On :

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இடைத் தோ்தலில் வாக்காளா்கள்அனைவரும் வாக்களிக்கவேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை என வலியுறுத்தும் வகையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு பதாகைகளுடன் சென்ற ஊா்வலத்தை ஆட்சியா் மு.வீரப்பன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன், மதுராந்தகம் வட்டாட்சியா் பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு, நகராட்சி ஆணையா் சுகேந்திரன் நகரமைப்பு அலுவலா் வேல்முருகன், மதுராந்தகம் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ஜெய்கணேஷ், உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பயணிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.