தீபாவளி: சிறப்பு ரயில் சேவை அறிவிப்பதில் தாமதம்
சென்னை, ஆக. 8: தீபாவளி சிறப்பு ரயில் சேவைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட


சென்னை, ஆக. 8: தீபாவளி சிறப்பு ரயில் சேவைகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும் வசதியுள்ள (பெர்த்) இருக்கைகள் எதுவும் காலியில்லை.
இதே போல சென்னை-கோவைக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களும் நிரம்பி வழிகின்றன. பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், முத்துநகர், அனந்தபுரி, குருவாயூர், மலைக்கோட்டை, வைகை, பொதிகை உள்ளிட்ட அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் சாதாரண தூங்கும் வசதியுள்ள (2-ம் வகுப்பு) இருக்கைகளுக்காக, சராசரியாக 250 முதல் 300 பேர் வரை முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னை ரயில்களில் இருமார்க்கங்களிலும் இதே நிலை தொடர்கிறது.
இந் நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறையில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல முக்கிய ரயில்களில் டிக்கெட் பெறும் வாய்ப்பை இழந்து ஏராளமானோர் தவிக்கின்றனர். இவர்கள் அனைவரும், தீபாவளி சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே எப்போது அறிவிக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் தெற்கு ரயில்வே 500 சிறப்பு ரயில் சேவைகளை இயக்கியது. நெரிசலைச் சமாளிக்கும் வகையில், தீபாவளி பண்டிகை நாள்களில் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் ஏற்பாடு செய்தது. இப்போது பயண நாளுக்கு 90 நாள்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 69 நாள்களே உள்ளன.
ஆனால், இன்னமும் தீபாவளி சிறப்பு ரயில் சேவைகளை அறிவிக்கப்படாதது பயணிகளிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை -கும்பகோணம் -தஞ்சாவூர் -திருவாரூர் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் வழியாக கும்பகோணத்துக்கு தினமும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்ட மக்கள் இந்த ஒரே ஒரு ரயிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
இதனால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீபாவளி பண்டிகை நாள்களில் டிக்கெட் முன்பதிவு கடந்த 15-ம் தேதிக்கு முன்னரே, நிறைவடைந்துவிட்டது.
இதனால், சென்னை -கும்பகோணம் -தஞ்சாவூர் -திருவாரூர் மார்க்கத்தில் தீபாவளி சிறப்பு ரயில் சேவைகளை போதிய அளவில் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...