டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மாநகராட்சி தாற்காலிக டிரைவர்களுக்கு விரைவில் பணி நிரந்தர ஆணை

சென்னை, ஏப். 10: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தாற்காலிக டிரைவர்களுக்கும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட

Updated On :20 செப்டம்பர் 2012, 7:16 am

சென்னை, ஏப். 10: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தாற்காலிக டிரைவர்களுக்கும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தாற்காலிக டிரைவர்களாக பணியமர்த்தப்பட்ட 28 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.÷இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டபோது, மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக ஊதியம் பெற்றுக்கொண்டு மாற்றுப் பணி அடிப்படையில் டிரைவர்களாக பணியாற்றுபவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை நிரந்தர டிரைவர்களாக பணியமர்த்திய பின்னரே, தாற்காலிக டிரைவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இடைக்காலத் தடையும் பெற்றனர்.

இதனால், மாநகராட்சி அதிகாரிகளும் தாற்காலிக டிரைவர்களை பணி நிரந்தரம் செய்யும் முயற்சியை கைவிட்டனர்.

÷இதைத்தொடர்ந்து தாற்காலிக டிரைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தாற்காலிக டிரைவர்கள் 28 பேரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று 30}4}2009 அன்று உத்தரவிட்டது. தீர்பளித்த நாள் முதல் 6 வாரங்களுக்குள் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அதன்பிறகும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தொடர்ந்து துணை முதல்வரிடமும், மேயரிடமும் கோரிக்கை விடுத்து வந்தனர். பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

÷இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக ஊதியம் பெற்றுக்கொண்டு மாற்றுப் பணி அடிப்படையில் டிரைவர்களாக பணியாற்றும் 63 பேரையும், தாற்காலிக டிரைவர்கள் 28 பேரையும் நிரந்தர டிரைவர்களாக பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி இப்போது மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து "தினமணி' நாளிதழுக்கு மேயர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் தாற்காலிக ஊழியர்களே இல்லை என்று நிலையை உருவாக்க, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், தாற்காலிக டிரைவர்கள் 28 பேர் உள்பட 91 பேரும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். இதற்கான தீர்மானம் வரும் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

எனவே, மே மாதம் முதல் வாரத்திலேயே இவர்களுக்கு பணி நிரந்த ஆணைகள் வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.