சென்னை, ஏப். 16: சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில், தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. ஆனால், இந்த நான்கு ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும், வெகுவாகக்குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,635 கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 109 கன அடி நீரும், செங்குன்றம் ஏரியில் 2,628 கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 2,363 கன அடி நீரும் இருப்பு உள்ளன. இந்த அளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 1,532 கன அடி குறைவாகும்.
அதேநேரம், வீராணம் ஏரியிலிருந்தும் இன்னும் ஒரு மாத காலத்துக்குத்தான் தண்ணீர் பெற முடியும் என்று சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நீர் ஆதாரங்களில் உள்ள இருப்பின் மூலம், வரும் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே, இப்போது வழங்கும் அளவில் தடையின்றி சென்னைக்கு குடிநீர் வழங்கமுடியும். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், நிலைமையை சமாளிப்பது எளிது.
இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்று சென்னை குடிநீர் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருவது, திட்டம் நடைமுறைக்கு வருமா? என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மார்ச் இறுதி வாரம் முதல், சென்னை குடிநீர் வாரியத்துக்கு குடிநீர் கிடைக்கும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், கடலுக்கு அடியில் குழாய் பொருத்துவதில் சிக்கல் தொடர்வதால், திட்டம் மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்று, இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிறுவன (சி.டபிள்யு.டி.எல்.) உயர் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆனால், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், திட்டம் மேலும் தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
சென்னையின் நீர் ஆதாரங்களில் இப்போது உள்ள தண்ணீர் இருப்பின் மூலம், செப்டம்பர் மாதம் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும். அதன்
பிறகு தென்மேற்கு பருவ மழை மூலம், நீர் ஆதாரங்கள் நிரம்ப வாய்ப்புள்ளது.
இதுமட்டும் அல்லாமல் குடிநீர் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டுவரும்,
ஆழ்துளை கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டு, தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

