ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஆசனவாயில் ரத்தம்: அலட்சியம் வேண்டாம்

சென்னை, ஜூன் 6: ஆசன வாயில் ரத்தம் வெளியேறினால், சுயமாக மூல நோய் என முடிவு செய்து அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எஸ்.எம். சந்திரமோகன் கூறினார். சென்னை அரசு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:55 pm IST

சென்னை, ஜூன் 6: ஆசன வாயில் ரத்தம் வெளியேறினால், சுயமாக மூல நோய் என முடிவு செய்து அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்று இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை நிபுணர் எஸ்.எம். சந்திரமோகன் கூறினார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய புற்று நோய் வெற்றி கண்டோர் தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. புற்று நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை செய்து கொண்டு வெற்றி கண்டு, மறுவாழ்வு பெற்ற பலர் தங்களது அனுபவத்தைப் பகிரிந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறியது:-

""புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது மிகவும் எளிது. மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறினால், அது புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு. மூல நோய் என்று கருதி உரிய மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது அல்ல என்றார் டாக்டர் சந்திரமோகன்.

  இந்த நிகழ்ச்சியில் 1988-ல் இரைப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இப்போது முழுமையாகக் குணம் அடைந்துள்ள ஷாஜஹான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியது:-

""புற்று நோய் வந்துவிட்டால் பயம் கூடாது. ஏனெனில் புற்று நோயைக் குணப்படுத்தும் அளவுக்கு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. இரைப்பை புற்று நோயை நான் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றதால் முழுமையாகக் குணம் அடைந்தேன்.  புற்று நோய் ஏற்பட்டவுடன் அதை மன ரீதியாக ஏற்றுக் கொள்ளும் தைரியம் எனக்கு இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தவுடன், டாக்டர் கூறும் சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் புற்று நோயை எதிர்த்து மறுவாழ்வு பெற முடியும்'' என்றார் ஷாஜஹான்.

வர்த்தகம் செய்யும் ஹுசேன் கூறியதாவது: ""எனக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆசன வாயிலிருந்து ரத்தம் வெளியேறியது. முதலில் மூல நோய் எனக் கருதினேன். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் மலக்குடல் புற்று நோய் இருப்பது உறுதியானது.  ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மலக்குடல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது நலமாக உள்ளேன். அண்மையில் இதய பை-பாஸ் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். எனது வர்த்தகப் பணியைத் தொடருகிறேன்'' என்றார் ஹுசேன். இவ்வாறு பல புற்று நோயாளிகள் தாங்கள் மறு வாழ்வு பெற்ற விதத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெ. மோகனசுந்தரம்: புற்று நோய் வராமல் தடுத்துக் கொள்வதே சிறந்தது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை வாய்ப் புற்று நோயைக் கண்டறிய "பேப் ஸ்மியர்' என்ற எளிய பரிசோதனை உள்ளது. இதை பெண்கள் உரிய நேரத்தில் செய்து கொள்ளத் தவறக் கூடாது. புற்று நோய் சிகிச்சைக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக விலை கொண்ட மருந்துகள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகின்றன என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் சென்னை அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் வேணி, துணை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, கல்வித் துறை அதிகாரி டாக்டர் கீதாலட்சுமி, உள்ளுறை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.) டாக்டர் என்.முத்துராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.