சென்னை, 26: மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மூடப்பட்டுள்ள பூங்காக்களுக்குப் பதிலாக புதிய பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
÷சென்னை மாநகரத்தின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அசோக் நகர் மாநகராட்சிப் பூங்கா, ஷெனாய் நகர் திரு.வி.க. பூங்கா, பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்கா மற்றும் சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா ஆகியவற்றில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
÷மேலும், பல ஆண்டுகளாக பசுமையுடன் காட்சியளிக்கும் பச்சையப்பன் கல்லூரியின் 300 மரங்கள், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அக்கல்லூரியின் மாணவர்களும், பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
÷பூங்காக்கள் சேதமடைவதால், அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, இதற்கு மாற்றாக புதிய பூங்காக்களை அமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷இதுகுறித்து ஷெனாய் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறியது:÷மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தற்போது மூடப்பட்டுள்ள திரு.வி.க. பூங்காவை தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்ட இப்பூங்காவை, தற்போது மூடியிருப்பது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயிலுக்கான பணிகள் முடிவடைந்த பின்பு, புதிய பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவசங்கரன் கூறியது: சென்னை மாநகரில் ஏற்கெனவே பூங்காக்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.
÷இதுகுறித்து மெட்ரோ ரயில் திட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:÷
இத்திட்டத்துக்காக கையகப்படுத்தபட்ட பூங்காக்களை மீண்டும் புனரமைப்பது தொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினருடன் ஆலோசனை செய்து வருகிறோம். மேலும், புதிய பூங்காக்களை அமைப்பது, மரக் கன்றுகளை நடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.
÷சென்னையை பசுமையாக்கும் பணியை சென்னை மாநகராட்சியும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


