கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மார்கழி வழிபாடு: ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்! கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்கா தெழ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:25 pm

பாவலர் மலரடியான்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்!

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

விளக்கம்: நந்தகோபரின் மாளிகை நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது. அதில் முதற் கட்டில் படுத்திருக்கும் நந்தகோபரை, உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் வாரிவழங்கும் வள்ளலே! எழுந்திரு! என்று எழுப்பினர். அடுத்த அறைக்குச் சென்று, பெண்கள் குலத்துக்கே கொழுந்து போன்றவளே! குலவிளக்கே! எங்கள் தலைவியே எழுந்திரு! என்று யசோதையை எழுப்பினர். ஒரு சமயம் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று, மூவடி மண்கேட்டு, பெரிய உருவங்கொண்டு மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட தேவாதி தேவனே! உறங்காதே எழுந்திரு என்று எழுப்பி, அடுத்த அறைக்குச் சென்றனர். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் உறங்காதே எழுந்திருங்கள் என்கின்றனர். இந்தப் பாசுரம் ஸ்ரீநந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும்.

முதல் இரண்டடிகள் நந்தகோபரைச் சொல்வதாக இருந்தாலும் ஆசார்யரைக் குறிக்கிறது. மூன்றாவது நான்காவது அடிகள் யசோதையைக் குறித்தாலும், "மந்த்ரோ மாதா' என்றபடி ஆசார்யன் உபதேசிக்கும் அஷ்டாக்ஷர திருமந்திரத்தைக் குறிப்பிடுகிறது. ஐந்து, ஆறாவது அடிகள் மந்திரத்துக்கு உள்ளீடான பகவானைக் குறிக்கிறது. ஏழு, எட்டு அடிகள் பகவானுக்குத் தொண்டுசெய்யும் அடியார்களைக் குறிக்கிறது என்பதாகக் கூறுவர். இந்தப் பாசுரம் "காழிச்சீராம விண்ணகரம்' என்கிற "சீர்காழி' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.