கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினா லுன்றன்னை
சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே!
இறைவா! நீதாராய்! பறையேலோ ரெம்பாவாய்!
விளக்கம்: கறவைகள் பால் கொடுக்கிறபடியால், காலையில் எழுந்து அவற்றை மேய்த்துக்கொண்டு காட்டிற்குச் சென்றுவிடுவோம். அவற்றோடு இருப்போம். அங்கேயே உண்போம். ஞானம் என்பதே இல்லாத ஒரு குலம். அப்படிப்பட்ட எங்கள் குலத்தில் நீ வந்து பிறக்கும்படியான புண்ணியத்தைப் பெற்றிருக்கிறோம். நீ எல்லாம் நிறைந்தவன். உன்னிடம் ஏதேனும் ஒன்று இல்லை என்றிருந்தால்தான் எங்களைக் கேட்டுப் பெறவேண்டும். "நீ குறையொன்றும் இல்லாத கோவிந்தன்'. உனக்கும் எங்களுக்கும் உறவுமுறை உண்டு. அது நீ ஏற்படுத்திக் கொடுத்த உறவு. அந்த உறவை உன்னாலும் போக்கிக்கொள்ள முடியாது. எங்களாலும் போக்கிக்கொள்ள முடியாது. இவ்வளவு நாள்களாக உனக்கு, நாராயணன், பரமன் என்ற பெயர்கள்தான் மிக உயர்ந்தவை என்று எண்ணினோம். ஆனால், கோவிந்தன் என்ற பெயர்தான் உனக்குப் பெருமை தருகிறது. நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள். ஆதலால் உன்னை எப்படிக் கூறவேண்டும் என்று தெரியாமல், உன்னை அழைத்துவிட்டோம் ஆதலால், நீ பொறுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் மீது கோபித்துக் கொள்ளாதே. எல்லோருக்கும் மேலானவனே! நீ எங்களுக்கு விரும்பும் பறையைக் கொடுத்தருள வேண்டும் என்கிறார்கள். இந்தப் பாசுரம் விருந்தாவனம் (பிருந்தாரண்யம்) என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


