சென்னை, மார்ச் 2: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் அமைப்பதற்கான பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்குகின்றன.
ஏற்கெனவே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் வெட்டும் பணிகள் கீழ்ப்பாக்கம், ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் தொடங்கியுள்ளன.
மேலும் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, சென்ட்ரல், எழும்பூர் ஆகிய இடங்களிலும் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
சென்னை மாநகரின் வாகனப் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரயில் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-வது வழித்தடத்திலும் இயக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தமுள்ள 45 கிலோ மீட்டர் தூரத்தில் 24 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை சுரங்கப் பாதையாக அமைக்கப்படுகிறது.
அதாவது, பூமிக்கு அடியில் சுமார் 17 மீட்டருக்கு கீழ் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், கேஎம்சி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர், திருமங்கலம், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி மேம்பாலம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தச் சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காக சீனாவிலிருந்து 5 "டனல் போரிங்' இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தயாராக வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் சுமார் 200 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் அகலத்துடன் 22 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஒரு ரயில் நிலையத்துக்கும் மற்றொரு ரயில் நிலையத்துக்கும் இடையே சுரங்கம் தோண்டும் பணிகளும் இதனையடுத்து தொடர்ந்து நடைபெறும்.
மேலும் 6 டனல் போரிங் இயந்திரங்கள், சுரங்கம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கு சீனாவிலிருந்து கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு டனல் போரிங் இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 10 மீட்டர் என வாரத்துக்கு 250 மீட்டர் தொலைவில் சுரங்கம் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நான்கு வழிகள்: சுரங்க வழியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகளில் அமைவதால், நிலையங்கள் ஒவ்வொன்றும் நான்கு வழிகளுடன் அமைக்கப்பட உள்ளன. நிலையத்தின் இந்த நான்கு வழிகள் மூலம், சாலையை கடந்து செல்ல ஏதுவாக, நிலையத்திலிருந்து நான்கு வழிகளிலும் இணைப்பு சுரங்கப்பாதைகளும் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிமென்ட் வார்ப்பு தயாரிப்பு தீவிரம்: மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு, வட்ட வடிவிலான சிமென்ட் வார்ப்புகள் தயாரிப்பதற்தான நவீன மோல்டுகள், சீனா மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த மோல்டுகள் மூலம் சிமென்ட் வார்ப்புகள் தயாரிப்பு வானகரம் மற்றும் வயலநல்லூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
அடுத்ததாக, டனல் போரிங் இயந்திரம், நேரு பூங்கா ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட உள்ளதால், இந்நிலையத்தில் பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, விரைவாக நடந்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டப் பயணம் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையிலான வழித்தடத்தில் 2013-ம் ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


