சென்னை, மார்ச் 25: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக கிண்டி - கத்திபாரா சந்திப்பில் தூண்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் வண்ணாரப் பேட்டையிலிருந்து, விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தொலைவுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ரயில் பாதை அமைக்கப்படும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 14.3 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள தூரம் மேம்பாலமாகவும் அமைக்கப்படுகிறது.
இரண்டாவது வழித்தடத்தில் சென்னை சென்ட்ரலில் தொடங்கி அண்ணாநகர் இரண்டாவது நிழற்சாலைவரை 9.7 கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையாகவும், மீதமுள்ள தூரம் மேம்பாலமாகவும் அமைக்கப்படவுள்ளன.
இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் சேவை கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையில் மேம்பாலம் மூலமாக 2013-ம் ஆண்டு இறுதியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் 370 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதுவரை 300 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை கிண்டி-கத்திபாரா சந்திப்பு அருகே உள்ள இந்திய புவியியல் துறைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
புள்ளியல் துறையின் ஆட்சேபம் காரணமாக குறிப்பிட்ட காலத்துக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில் சென்னை கிண்டி கத்திபாரா சந்திப்பு அருகே இந்திய புவியியல் துறைக்குச் சொந்தமான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
இப்போது இந்த இடத்தில் 5 தூண்கள் அமைக்கும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும் என மெட்ரோ ரயில் உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும், கத்திபாரா வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான இடத்தையும் விரைவில் கையகப்படுத்தி தூண்கள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
13 ஆயிரம் மரக்கன்றுகள்: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக இதுவரை 1500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 13,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. எனவே மேலும் புதிதாக 3,000 மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


