கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் சுமார் 9.8 கிலோ மீட்டர் தொலைவிலான தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் ரூ.14,600 கோடியில் அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-வது பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையும், 2- வது வழித்தடமான சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரையும் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது.
மொத்தமுள்ள 45 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதையில் 24 கிலோ மீட்டர் வழித்தடம் சுரங்கப் பாதையாக அமைக்கப்படுகிறது. மீதமுள்ள 21 கிலோ மீட்டர் மேம்பாலம் வாயிலாக மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
தண்டவாளப் பணிகள்: இதில் கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான வழித்தடத்தில் இந்தாண்டு இறுதியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் சுமார் 9.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்போது தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழுமையடைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் கோயம்பேடு தொடங்கி அசோக் நகர் வரையில் மேம்பாலங்களுக்கான தூண்கள் அமைக்கும் பணியும் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இப்போது கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் இருந்து பரங்கிமலை வரை தூண்கள் மற்றும் இணைப்பு தூண்கள் அமைக்கும் பணிகளும் வேகமடைந்துள்ளன.
சோதனை ஓட்டம்: சென்னை கோயம்பேடு-பரங்கிமலை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம் 2013 செம்படம்பர் மாதம் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதல் கட்டமாக இந்த வழித்தடத்தில் கோயம்பேடு - பரங்கிமலை இடையில் வரும் டிசம்பரில் மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தாமதமானால் 2014 ஜனவரியில் இயக்கப்படும். ஜூன் மாதம் பிரேசிலில் இருந்து மெட்ரோ ரயில் பெட்டிகள் வந்தவுடன் அவை இணைக்கப்படும். பின்பு கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான வழித்தடத்தில் சுமார் 2 மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்பே மெட்ரோ ரயில் சென்னையில் தனது முதல் சேவையை தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


