எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வியாசர்பாடியில் ரௌடி வெட்டிக் கொலை

சென்னை வியாசர்பாடியில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:32 pm

தினமணி

சென்னை வியாசர்பாடியில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

வியாசர்பாடி எஸ்.எம். நகரைச் சேர்ந்தவர் சா.காமேஷ் (24). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்குத் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காமேஷ், அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தாராம்.

அதேவேளையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சில ரௌடிகளுக்கும் காமேஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், காமேஷ் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாம். அதில் பேசிய நபர், எஸ்.எம்.நகர் மைதானத்துக்கு வருமாறு அழைத்ததாகத் தெரிகிறது.

உடனே காமேஷ், அந்த மைதானத்துக்குச் சென்றார். அப்போது காமேஷுக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இது குறித்து வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ரௌடிகள் மொக்கை ரவி, பாலாஜி,மணி,புஷ்பாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.