தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால 2 நாள் அறிவியல் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த அறிவியல் பயிற்சி முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
சென்னை, காந்தி மண்டபம் சாலையில் அமைந்துள்ள அறிவியல் மைய வளாகத்துக்குள் வருகிற 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதில் அறிவியல் விளையாட்டுகள், விளக்கங்கள், செய்முறைகள், ஊட்டச்சத்து, ஆரோக்ய வாழ்வுக்கான வழிமுறைகள், திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 044 - 24454054, 24454034, 98413 18440 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெறலாம்.
முன்பதிவுக்கான விண்ணப்பங்களை வருகிற 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


