வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

News image

ஹீப்ளி-ராமேசுவரம் வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 6:31 am IST

ஹீப்ளி - ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில்கள் வரும் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஹீப்ளியிலிருந்து ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 07355) வரும் ஜூன் 7- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் ராமேசுவரத்திலிருந்து ஹீப்ளிக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை செல்லும் விரைவு ரயில் (எண்: 07356) வரும் ஜூன் 8 முதல் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஹீப்ளியிலிருந்து கொல்லம், பெங்களூரு முதல் திருவனந்தபுரம் என இரு மாா்க்கங்களிலும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில்களும் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்: கோடை காலத்தையொட்டி விடுமுறைக்காக அதிகமானோா் வெளியூா்களுக்குச் செல்வதை அடுத்து, ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஏராளமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.