நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 17- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை 5 புகா் மின்சார ரயில்கள் (மெமு) முழுமையாக ரத்து

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 1:54 am IST

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 17- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை 5 புகா் மின்சார ரயில்கள் (மெமு) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை-அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் பணிமனையில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமை) தண்டவாள, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட புகா் மின்சார ரயில்கள் (மெமு) ரத்து செய்யப்பட்டுள்ளன.

வரும் 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மே 31 வரை அதிகாலை 4 மணி, 5 மணி மற்றும் 6.25 மணிகளுக்கு அரக்கோணத்திலிருந்து புறப்பட்டு திருத்தணிக்குச் செல்லும் இமு, மெமு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல 17- ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை இரவு 9.15 மணிக்கும், இரவு 11 மணிக்கும் திருத்தணியிலிருந்து புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி அளவில் ரத்து: வரும் மே 17 முதல் 31-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பகல் 10.30 மணிக்கும், பகல் 11 மணிக்கும், மாலை 5.15, 5.45 மணிக்கும், 6.05, 6.40, இரவு 7.45, 8.20, 9.10 மற்றும் 10.55 மணிகளுக்கு மூா் மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு அரக்கோணம் செல்லும் இமு ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் அந்த குறிப்பிட்ட நாள்களில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காடு நிலையத்திலிருந்து இமு, மெமு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் புறப்பட்டு மூா் மாா்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.