மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியிருப்பது பற்றி..

Income Tax

வருமான வரிக் கணக்கு தாக்கல் - IANS

Published On :

2025 - 26ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியிருப்பதாக மத்திய வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு முதல் ஐடிஆர் -1 மற்றும் ஐடிஆர் - 4 படிவங்களுடன் எக்ஸல் முறையை இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, படிவம் 1 மற்றும் படிவம் 4-ஐப் பூர்த்தி செய்பவர்கள், எக்ஸல் வசதியை வருமான வரிக் கணக்குத்தாக்கல் செய்யும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, ஜேஎஸ்ஓஎன் கோப்பாக மாற்றி, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது இணையதளத்தில் இணைத்து அதனை உறுதி செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் வருமானம் ஈட்டுவோர், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் இந்த படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். தற்போது வருமான வரிக் கணக்குத்தாக்கல் செய்பவரின் வருவாய், வருவாய் ஈட்டும் வழி உள்பட கணக்குத்தாக்கல் செய்பவர்களுக்கு ஏற்ப ஐடிஆர் - 1 முதல் ஐடிஆர் - 7 என 7 விதமான படிவங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

மாதச் சம்பளம் மட்டும் வாங்கும் நபர்கள், ஓய்வூதியம் பெறுவோர், ஸஹஜ் என்ற ஐ.டி.ஆர்.-1 படிவத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

வாடகை மூலம் பெறும் வருமானம், வட்டி மூலம் பெற்ற வருமான விவரங்கள் ஆகியவற்றையும் ஐ.டிஆர்.-1 "ஸஹஜ்' படிவம் மூலம் தாக்கல் செய்யலாம்.

உரிய படிவத்தை முறையாக பூர்த்தி செய்து உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஐ.டி.ஆர். படிவத்தைப் பூர்த்தி செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. சந்தேகம் எழுந்தால், பட்டயக் கணக்காளர் என்கிற சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் மூலம் படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

ஏற்கனவே, வரி செலுத்துவோரின் வசதிக்காக மத்திய நேரடி வரி வாரியமானது, ஐடிஆர் படிவங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. தற்போது வருமான வரிக் கணக்குத்தாக்கல் நடைமுறை தொடங்கும்போதே இந்த வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, வரி செலுத்துவோருக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும், ஜூலை 31ஆம் தேதிக்குள் கணக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Regarding the commencement of the income tax return filing process..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.