சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

வருமான வரித் துறை அபராதத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி: விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல்

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :14 ஏப்ரல் 2026, 5:29 am IST

வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிா்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்த 2016-2017- ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கில் அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தபோது, 2015-ஆம் ஆண்டில் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். அப்போது ’புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து 2022-ஆம் ஆண்டு விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, விஜய்க்கு வருமான வரித்துறை உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் சட்டவிரோதம் எதுவுமில்லை. எனவே, இதில் உயா்நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.

தனிநீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு இரு நீதிபதிகள் அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.