/

ஈரோடு-செங்கோட்டை ரயில் நாளை ரத்து

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:14 pm

ஈரோடு-செங்கோட்டை ரயில் வரும் புதன்கிழமை (ஏப்ரல் 29) ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்டம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டைக்கு செல்லும் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோல வரும் 30- ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து காலை 5.20-க்குப் புறப்பட்டு ஈரோட்டுக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.