மத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

அரக்கோணம்-திருத்தணி இடையேயான குறிப்பிட்ட 2 மின்சார ரயில்களின் சேவையானது ஏப். 27 முதல் வரும் மே 17 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

Arakkonam–Thiruthani Electric Train services Cancelled

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் 21 நாள்களுக்கு ரத்து - (கோப்புப்படம்)

Published On :

சென்னை, ஏப்.26: அரக்கோணம்-திருத்தணி இடையேயான குறிப்பிட்ட 2 மின்சார ரயில்களின் சேவையானது திங்கள்கிழமை (ஏப். 27) முதல் வரும் மே 17 -ஆம் தேதி வரை 21 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு விவரம்:

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையடுத்து வரும் 27 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வரும் மே 17 ஆம் தேதி வரையில் மொத்தம் 21 நாள்கள் குறிப்பிட்ட 2 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி மற்றும் காலை 5 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருத்தணியிலிருந்து 27 ஆம் தேதி முதல் வரும் மே 16 ஆம் தேதி வரையில் இரு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பிட்ட அந்த நாட்களில் திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணிக்கும், 11.10 மணிக்கும் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதியளவு ரத்து: மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.27) முதல் வரும் மே 16 ஆம் தேதி வரையில் பிற்பகல் 11 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய மின்சார ரயில் அதற்குப்பதிலாக திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும். திருத்தணியிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்குப் புறப்படவேண்டிய மின்சார ரயில் அதற்குப் பதிலாக திருவாலங்காட்டிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும். மூா்மாா்க்கெட்டிலிருந்து மேற்குறிப்பிட்ட காலகட்டங்களில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காடு நிலையத்தில் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

According to the railway sources here on Sunday, EMU train services will be fully cancelled from April 26 to May 16, 2026.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.